தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்ட அட்மா சார்பில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் ஸ்ரீவைகுண்டம் வட்டார பகுதியைச் சேர்ந்த கொற்கை உழவர் உற்பத்தியாளர் குழுவினர் மாநில அளவிலான வேளாண்மை வணிகத்திற்கான தொழில் முனைவோர் பயிற்சிக்காக சேலம் மற்றும் நாமக்கலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த பயிற்சிக்காக விவசாயிகள் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செயல்பட்டு வரும் பல்வில் சுதேசி உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு சென்றனர்.
குழுவின் தலைவரான தியாகராஜன், உற்பத்தியாளர் குழு உருவான விதம், விற்பனை பொருட்கள், விற்பனை அங்காடிகள், அரசின் மூலம் பெறும் உதவிகள் பற்றி கூறினார். தொடர்ந்து குழுவில் தயாரிக்கப்படும் பொருட்கள், சிறுதானிய மதிப்பு கூட்டு பொருள்கள், நாவல் பழச்சாறு, அத்திமலர் அத்திப்பழச்சாறு என பல்வேறு வேளாண்மை சார்ந்த மதிப்பு கூட்டிய பொருட்கள் மற்றும் தயாரிப்பு முறைகள் பயன்பாடுகள் சந்தைப்படுத்துதல் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும் உற்பத்தியாளர் குழுவில் மதிப்புகூட்டிய பொருள்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
தொடர்ந்து சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் உற்பத்தியாளர் குழுவான தங்கதாமரை உழவர் உற்பத்தியாளர் குழு மற்றும் விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சேமிப்பு கிடங்குகளுக்கு சென்றனர். இக்குழுவின் சேர்மன் சம்பத் குழு உருவான விதம் பயிறு மற்றும் கூட்டிய பொருட்கள் அரசர் வழங்கப்படும் திட்டங்கள் மானியங்கள் நடைமுறையில் உள்ள திட்டங்கள் விதிமுறைகள் பற்றி விரிவாக கூறினார்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் வணிகம் துறை சார்பில் அருணாசலம் உதவி வேளாண்மை அலுவலர் மேற்கொண்டார்.


