செய்துங்கநல்லூரில் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்தநாள் விழா இன்று வெகு வெமர்சையாக கொண்டாடப்பட்டது.
கருங்குளம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் இசக்கி பாண்டியன் தலைமையில் செய்துங்கநல்லூர் மெயின் பஜாரில் அலங்கரித்து வைக்கப்பட்ட கலைஞர் கருணாநிதியின் திரு உருவப்படத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஆறுமுகம் பெருமாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்துங்கநல்லூர் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன் இலவச வேஷ்டி சேலை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளர் கலிலூர் ரகுமான், ஒன்றிய துணைச் செயலாளர் பக்கபட்டி சுரேஷ், மாவட்ட பிரதிநிதி கண்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் மைமூன் அப்துல் கரீம், சுந்தரி குமார், பஞ்சாயத்து தலைவர்கள் செய்துங்கநல்லூர் பார்வதிநாதன், ஆறாம் பண்ணை ஷேக் அப்துல் காதர், ராமானுஜம்புதூர் ஸ்ரீரங்கன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தனராஜ், துணைத் தலைவர் சுடலை, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் இசக்கி, ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர் முத்துசாமி, முன்னாள் அவைத் தலைவர் பட்டன், ஒன்றிய சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் அப்துல், முன்னாள் ஒன்றிய செயலாளர் நல்லமுத்து, ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன், கிளைச் செயலாளர்கள் முருகேசன், தர்மலிங்கம், அருள் மேயர், சுந்தர், முருகன், ஆச்சிமுத்து, தாடி முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


