கயத்தார் கிராமத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4 இலட்சத்திற்கான நிவாரண நிதியுதவியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் கிராமத்தில் கடந்த 28.05.2023 அன்று சுப்பையா என்பவர் மின்னல் தாக்கி உயிரிழந்ததை தொடர்ந்து, அன்னாரது மனைவி மாரியம்மாள் அவர்களிடம் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 இலட்சத்திற்கான காசோலை, வீட்டு மனைப்பட்டா மற்றும் மாதாந்திர விதவை உதவித் தொகை பெறுவதற்கான ஆணை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் இன்று வழங்கினார். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், உதவி ஆட்சியர் கௌரவ் குமார், கயத்தார் வட்டாட்சியர் செ.நாகராஜன் உடனிருந்தனர்.


