பத்தாம் வகுப்புத் தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்ற திருநெல்வேலி ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி மாணவருக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வல்லநாட்டைச் சேர்ந்த மாணவர் அர்ஜுன பிரபாகரன் இவர் பாரதியார் கல்வி பயின்ற திருநெல்வேலி ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் படித்து வருகிறார் இவ்வாண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் 495 மதிப்பெண்கள் எடுத்துப் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார். இவரைப் பாராட்டி வல்லநாடு அருள்மிகு ஆவுடை அம்பாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவிலில் நடைபெற்ற பிரதோஷ பூஜை விழாவில் புதுக்கோட்டை திருநாவுக்கரசர் சைவ சபை மற்றும் வல்லநாடு பாரதி மழலையர் துவக்கப்பள்ளி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும்மாணவன் அர்ஜுன பிரபாகரனின் மேற்படிப்புக்குக் கல்வி உதவித் தொகையும் வழங்கிக் கெளரவித்தனர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள், திருமூல நாதர் பக்தர் பேரவையினர் மற்றும் அர்ச்சகர்கள் சண்முகசுந்தர பட்டர், சந்தோஷ் பட்டர் , ஹரி பட்டர் ஆகியோர் சாதனை மாணவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்


