பெரியதாழை மீனவ பெண்களுடன் மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் நரேந்திரமோடி கானொளி காட்சி மூலம் உரையாடினார்.
பெரியதாழை மீனவ பெண்களுடன் மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் நரேந்திரமோடி கானொளி காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை உரையாடினார்.
பாரத பிரதமர் நரேந்திரமோடி மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் காணொளி காட்சி மூலம் மக்களிடம் உரையாடி வருகிறார். 100வது நிகழ்ச்சியாக கடந்த மாதம் பல்வேறு பகுதி மக்களிடம் உரையாடினார். இந்நிலையில் மனதின் குரல் 101வது நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை பாரத பிரதமர் நரேந்திரமோடி காணொளி காட்சியில் உரையாடினார். இதனையொட்டி சாத்தான்குளம் ஒன்றியம் பெரியதாழையில் மீனவ பெண்களுடன் பிரதமர் நரேந்திரமோடி உரையாடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரியதாழை சமூக நலக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த கானொளி காட்சி மூலம் பிரதமர் உரையாற்றினார். அப்போது மீனவ பெண்களுக்கு ஜல் ஜீவன் திட்டம் மூலம் கிராமபுற வீடுகள் தோறும் குடிநீர் வழங்கும் திட்டம் குறித்தும், நீர் மேலாண்மை குறித்தும் அதன் பாதுகாப்பு குறித்தும் உரையாடினார்.
இதில் பாஜக மாநில பொதுச் செயலர் பொன் பாலகணபதி, மாநில மகளிரணி பொதுச் செயலர் வெள்ளையம்மாள், தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில், மாநில இளைஞரணி செயலர் பூபதிபாண்டியன், மாவட்ட பிரசார பிரிவு தலைவர் மகேஸ்வரன், ஊராட்சித் தலைவர்கள் பெரியதாழை பிரதீபா, கொம்மடிக்கோட்டை ராஜபுனிதா, படுக்கப்பத்து தனலட்சுமி சரவணன், ஒன்றிய பாஜக தலைவர் சரவணன், நகர தலைவர் ஜோசப், ஒன்றிய வழக்குரைஞர் பிரிவு தலைவர் முருகானந்தம், ஒன்றிய பொதுச் செயலர் ஜெயராஜேஷ்குமார், மாநில விருந்தோம்பல் பிரிவு செயலர் பாலமுருகன், மாவட்ட அமைப்பு சாரா பிரிவு செயலர் ராம்மோகன், ஒன்றிய அமைப்பு சாரா பிரிவு செயலர் பழனி மற்றும் பெரியதாழை மீனவ பெண்கள் பலர் கலந்து கொணடனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சாத்தான்குளம் ஒன்றிய பாஜகவினர் செய்திருந்தனர்.


