படம் எஸ்ஏடி 28கபடி: போட்டியில் வென்ற கூடன்குளம் அணிக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ வழங்கிய பரிசு மற்றும் கோப்பையை வழங்குகின்றனர் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் லூர்துமணி, கிராம கமிட்டித் தலைவர் முத்துராஜ், முதலூர் ஊராட்சித் தலைவர் பொன்முருகேசன்.
ஆத்திக்காட்டில் நடந்த மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டியில் கூடன்குளம் அணிக்கு முதல் பரிசு கிடைத்தது.
சாத்தான்குளம் அருகே உள்ள ஆத்திக்காடு புனித கன்னிமரியாவின் இருதய மாதா ஆலய திருவிழாவையொட்டி சிவந்திமலர் ஸ்போட்ஸ் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான ஒரு நாள் மின்னொளி கபடி போட்டிகள் நடைபெற்றது. இதில் கூடன்குளம், சாத்தான்குளம், உடன்குடி. ஆத்திக்காடு, தட்டார்மடம், கன்னியாகுமரி, நெல்லை. மீரான்குளம், மெஞ்ஞானபுரம் உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொண்டன. முதல் நாள் போட்டியை சாத்தான்குளம் மத்திய ஒன்றிய திமுக செயலரும், முதலூர் ஊராட்சித் தலைவர் பொன்முருகேசன் தொடங்கி வைத்தார். இறுதி போட்டியில் கூடன்குளம் அணியும், மீரான்குளம் அணியும் மோதின. இதில் கூடன்குளம் அணி வென்று முதல் பரிசும், மீரான்குளம் அணிக்கு 2ஆம் பரிசும், நெல்லை சுரேஷ் பிரதர்ஸ் அணிக்கு 3ஆம் பரிசும், மெஞ்ஞானபுரம் ஜான்தாமஸ் அணிக்கு 4ஆம் பரிசும் பெற்றது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் முதல் பரிசு பெற்ற கூடன்குளம் அணிக்கு ஊர்வசி எஸ். அமிர்தராஜ் எம்எல்ஏ வழங்கிய ரூ25 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பையை தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் லூர்துமணி, கிராம கமிட்டித் தலைவர் முத்துராஜ் ஆகியோர் வழங்கினர். 2ஆம் பரிசு பெற்ற மீரான்குளம் அணிக்கு மத்திய ஒன்றிய திமுக செயலர் பொன்முருகேசன் ரூ15 ஆயிரம் வழங்கினார். 3ஆம் பரிசு பெற்ற நெல்லை சுரேஷ் பிரதர்ஸ் அணிக்கு 10 ஆயிரத்தை மாவட்ட திமுக பிரதிநிதி லட்சுமணசுபாஷ் வழங்கினார். 4ஆம் பரிசு பெற்ற மெஞ்ஞானபுரம் ஜான்தாமஸ் அணிக்கு ரூ 10 ஆயிரத்தை தொழிலதிபர் தபசுமணி வழங்கினார். தொடர் நாயகன் கோப்பையை திராவிடசெல்வன், சிறந்த கேட்சருக்கான கோப்பையை மாவட்ட திமுக தொழல்நுட்ப அணி துணை அமைப்பாளர் திவாகர்சாம் ஆகியோர் வழங்கினர். இதில் ஜெயக்குமார், ஜீவராஜ், ஜெயசீலன், பட்டுத்துரை, முத்துப்பாண்டி, வேல்துரை , பாக்கிய செல்வன், கிறிஸ்டோபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


