பண்டாரபுரம் ஸ்ரீமன் நாராயண சுவாமி தர்மபதி வைகாசி திருவிழா ஆறு நாட்கள் நடந்தது. சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரம் ஸ்ரீமன் நாராயண சுவாமி தர்மபதியில் வைகாசி திருவிழா கொண்டாடப்பட்டது. முதல் நாள் சிறப்பு பணிவிடையும் இரவு ஐயா பச்சை மாலாக பூ வாகனத்தில் பவனி வருதல் இரண்டாம் நாள் பால் வண்ணராகவும் மூன்றாம் நாள் ஐயா கருட வாகனத்திலும் நகர் வலம் வந்தார். நான்காம் நாள் சந்தன குடம் எடுத்தல் ஐயா ஆஞ்சநேயர் வாகனத்தில் பவனி மற்றும் கோலாட்டம் நடந்தது. ஐந்தாம் நாள் ஐயா குதிரை வாகனத்தில் வேட்டைக்கு செல்லுதல். இரவு ஐயாவின் அருள் இசைக்கச்சேரி நடந்தது. நிறைவு நாள் அன்று பணிவிடை, இனிமம் வழங்குதல்,சமபந்தி தர்மம் நடந்தது .பெண்களுக்கான கோலப்போட்டி ,சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா ராஜகோபால் மற்றும் பண்டாரபுரம் ஸ்ரீமன் நாராயண சுவாமி தர்மபதி அன்பு கொடிமக்கள் செய்திருந்தனர்.


