2/6/2023 வைகாசி விசாகம் தாமிரபரணி அவதார தினம் மட்டுமன்றி முருகப் பெருமானின் அவதார தினம்
இருவருமே கைலாய மலையில் உள்ள தடாகத்தில் வைகாசி விசாக தினத்தில் அவதரித்ததால் தாமிரபரணிக்கு விசாகி, என்றும் முருகப் பெருமானுக்கு விசாகன் என்ற திருநாமம் உண்டானது.
பூகோளத்தில் மேற்கு மலையில் தோன்றி கிழக்கு கடலில் கலக்கும் இந்தியாவின் கடைக்குட்டி நதியான தாமிரபரணிக்கு மட்டும் நட்சத்திர அந்தஸ்து (பரணி) உண்டு.
மற்றய நதிகள் நதி தேவதைகள். ஆனால் தாமிரபணியோ மற்றய நதிகளுக்கு தீர்த்த சக்தியை தரும் மகாநதி. எனவே ஆறு என அழைக்கிறோம்.
மற்ற நதிகளில் நீராடினால் பாவம் தொலையும் ஆனால் தாமிரபரணியின் ஒரு திவளை நீர் பட்டாலோ அல்லது. தாமிரபரணியின் மீது பட்ட காற்று நம்மீது பட்டால் கூட பாவம் தொலைந்துவிடும்.
எனவே வைகாசி விசாக தினத்தில் தாமிரபரணியில் நீராடி, ஆர்த்தி எடுத்து வழிபட்டால் எப்பேர்பட்ட பாவங்களும் தீரும்.எந்தவித பரிகாரமும் தேவையில்லை.
தாமிரபரணியை சுத்தமாக வைத்திருப்பது அனைவரின் கடமை. மரத்தடி ஜோசியர் பேச்சை எல்லாம் கேட்டு உடுத்திய ஆடைகளை தாமிரபரணியில் விட்டு சென்றால் நளனுக்கு ஏற்பட்ட துன்பங்கள் வந்து சேரும்.
எனவே தாமிரபரணியை போற்றுவோம்.. ஆறுதல் அடைய ஆற்றில் பாதுகாப்பாக நீராடி ஆறுதல் பெற ஆறுமுகனை வணங்குவோம்


