சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2023-2024 ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை 30.05.2023 அன்று தொடங்கவுள்ளது என்று கல்லூரி முதல்வர் முனைவர் சக்தி ஸ்ரீ கூறியுள்ளார். அவர் தனது அறிக்கையில், கல்லூரியில் இளங்கலை தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல், வணிகவியல், வணிக நிர்வாகவியல் ஆகிய துறைகளுக்கான சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு 30.05.2023 அன்று நடைபெறவுள்ளது என்று கூறியுள்ளார். சிறப்பு ஒதுக்கீட்டில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், மாநில அளவிலான விளையாட்டு வீரர்கள் மற்றும் தேசிய மாணவ படை வீரர்கள் முதலானோர் கலந்து கொள்வர். முதல் கட்ட கலந்தாய்வுகள் – I, கணினி அறிவியல் மற்றும் கணிதவியல் துறைக்கு 01.06.2023 அன்றும், வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகவியல் துறைக்கு 02.06.2023 அன்றும், ஆங்கிலம் மற்றும் தமிழ் துறைக்கு 03.06.2023 அன்று நடைபெறும். மேலும் முதல் கட்ட கலந்தாய்வுகள் – II, கணினி அறிவியல் மற்றும் கணிதவியல் துறைக்கு 06.06.2023 அன்றும், வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகவியல் துறைக்கு 07.06.2023 அன்றும் ஆங்கிலம் மற்றும் தமிழ் துறைக்கு 08.06.2023 அன்று நடைபெறும். கலந்தாய்வுகள் ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் நடைபெறும். கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை அறையில் கலந்தாய்வுகள் நடைபெறும். மாணவிகள் கலந்தாய்வுக்கு குறித்த நேரத்திற்கு பெற்றோர்/ பாதுகாவலருடன் வருகை தர வேண்டும். கலந்தாய்விற்கு வரும் போது 10, +1,+2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (TC), சாதிச் சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான உரிய சான்றிதழ், ஆதார் அட்டை அசல் (Original) & நகல்கள் – 2 , passport size photo – 4, வங்கி சேமிப்பு கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் – 2 ஆகிய அனைத்து சான்றிதழ்களும் அசல் மற்றும் நகல்கள் எடுத்து வர வேண்டும். சிறப்பு ஒதுக்கீட்டுக் கலந்தாய்வில் கலந்து கொள்ள அதற்கான சான்றிதழைக் கொண்டு வர வேண்டும். இணையத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் (அனைத்து பக்கங்கள்) 2 நகல்கள் எடுத்து வர வேண்டும். கலந்தாய்வில் ஒரு பாடத்தில் சேர்க்கை பெற்ற பின் வேறு பாடப்பிரிவிற்கு கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. கல்விக் கட்டணம் முழுவதும் செலுத்திய பிறகே சேர்க்கை பூர்த்தியாகும். இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று மாற்றுச் சான்றிதழ் பெற்றவர்கள் மீண்டும் இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்க்கை பெற இயலாது. விண்ணப்பம் செய்தவர்களின் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் கல்லூரி இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. http://www.gasc-sathankulam.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம் என்று கல்லூரி முதல்வர் முனைவர் சக்தி ஸ்ரீ கூறியுள்ளார்.


