குலசேகரன்பட்டினத்தை சேர்ந்த அருண்குமார் என்பவர் அப்பகுதியில் கடல் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று இரவு சாத்தான்குளத்தில் இருந்து குலசை நோக்கி சென்ற போது சாலையோர புதை மண் வழுக்கி இவரது இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


