தூத்துக்குடி மாவட்டம் கீழவல்லநாடு பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் ஐயப்பன் ஆகிய இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஐயப்பன், முருகனை கத்தியால் தாக்கியுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


