தாமரைமொழி ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் கொடைவிழாவையொட்டி கால்நாட்டு வைபவம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் அருகே உள்ள தாமரைமொழி ஸ்ரீமுத்தாரம்மன், சந்தனமாரியம்மன் கோயிலில் கொடை விழா 30ஆம்தேதி தொடங்கி 31ஆம்தேதி வரை 2நாள்கள் நடைபெறுகிறது. இதனையொட்டி கோயில் வளாகத்தில் கொடை விழா கால்நாட்டு வைபவம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதனையடுத்து அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு கோயில் வளாகத்தில் நடப்பட்டது. இதில் கோயில் நிர்வாகிகள் ஊர்மக்கள் பலர் பங்கேற்றனர்.


