.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே அகரத்தில் மத்திய தொல்லியல் துறையினர் அகழாய்வு கனிமொழி எம்.பி துவக்கி வைத்தார்.
ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக திருச்சி மண்டல மத்திய தொல்லியல் துறை இயக்குனர் அருண்ராஜ் தலைமையில் ஆய்வாளர்கள் யதீஸ்குமார், முத்துகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த இடத்தில் உள்ளது உள்ளபடியே கண்ணாடி அமைத்து சைட் மியூசியம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. மேலும் இங்குள்ள ஏ, பி, சி, சைட்டில் மியூசியம் அமைத்தும், மேலும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் முது மக்கள் தாழி வடிவத்தில் அருங்காட்சியம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணி நடந்து வருகிறது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் மத்திய நிதி அமைச்சர் சீதா ராமன் இதற்கான அடிக்கல்லை ஆதிச்சநல்லூரில் நட உள்ளார். இதற்கான பணி மிக வேகமாக நடைபெறுகிறது.
இதற்கிடையில் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் புதைக்கப்பட்ட மக்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிவதற்காக ஆதிச்சநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள திருக்களூர், அகரம், கொங்கராயகுறிச்சி, கருங்குளம் ஆகிய 5 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்று ஒன்றிய தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
இதன் முதல் கட்டமாக திருக்களூரில் அகழாய்வு பணிகள் தொடங்கியது. இந்த அகழாய்வு பணியில் தற்போது வரை ஏராளமான தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக இங்கு சுடப்படாத மண் செங்கல், நான்கு தரைத்தளங்கள், சுடுமண் குழாய்கள், அடுப்பு, பானை ஓடுகள், பல வண்ணங்கள் கொண்ட பாசிகள், உடைந்த வளையல்கள், இரும்பு பொருட்கள், செம்பு காசுகள் மற்றும் சுடுமண் உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், அகழாய்வு பணியை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் ஆய்வு செய்தார். அதன்பின் அங்கு வைககப்பட்ட கண்காட்சியில் இருந்த திருககோளூர் பொருள்களை பார்¬வியட்டார்.
அதன் பின் அருகில் இருந்த சேர சோழ பாண்டிஸ்வரர் திருக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார். அந்த கல்வெட்டு பிற்காலத்தில் கோயில் திருப்பணி செய்யும் போது மாறி அமைந்த காரணத்தினால் அதை முறைப்படுத்த முடியவில்லை என்றும் அதே வேளையில் கல்வெட்டு மூலமாக திரு க்கோளூர் என்றழைக்கப்படும் தற்போது உள்ள ஊர் திருவழுதி வளநாட்டுத் திருக்கோளூர், திருக்கோளூரான சிந்தாமணி நல்லூர் , திரு க்கோளூரான உலக சிந்தாமணி புரம் ன்றழைக்கப்பட்டடிரு க்கிறது. என ஆய்வாளர்கள் விளக்கமளித்தனர். அதை ஆர்வத்துடன் கனிமொழி எம்பி கேட்டறிந்தார்.
அதன் பின் வல்லநாடு அருகே உள்ள அகரம் பகுதியில் ஆதிச்சநல்லூரில் புதையுண்ட மக்களின் வாழ்விடத்தினை தேடி அகழாய்வு பணி மத்திய அரசு சார்பில் நடைபெற உள்ளது. இந்த அகழாய்வு பணிகளை கனிமொழி தொடங்கி வைத்தார்.

அகரம் வந்த கனிமொழியை கருங்குளம் சேர்மன் கோமதி ராஜேந்திரன், வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் சந்திரா முருகன், கருங்குளம் ஒன்றிய வடக்கு செயலாளர் ராமசாமி உள்பட பலர் வரவேற்றனர். அதன்பின் திருச்சி மண்டல தொல்லியல் இயக்குனர் அருண்ராஜ் ஆய்வு குறித்து விளக்கமளித்தார்.
இதற்கான அமைக்கப்பட்ட தற்காலிக படிகட்டு வழியாக கனிமொழி எம்.பி , மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், ஒட்டபிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா ஆகியோர் இறங்கி பார்வையிட்டனர். அங்கு 3500 வருடங்களுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்த அடையாளங்களை ஆய்வாளர் எம்.பிககு காட்டினார்கள்.
அதன்பின் அகழாய்வு பணியை கனிமொழி எம்.பி துவககி வைத்தார். அதன் பின் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது தமிழ் மக்களின் பெருமை என்னவென்றால் மிக மூத்த குடி தமிழ்க்குடி. தமிழின் பெருமை தமிழின் பெருமை என்னவென்றால் தொன்மையும் இருக்கிறது, தொடர்ச்சியும் இருக்கிறது. 3500 ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்ட நமது தமிழ் மொழி தற்போது பேசப்படுகிறது. ஆனால் இதற்கிடையில் பல மொழிகள் காணாமல் போய்விட்டது. ஆனால் தமிழ் மொழி தற்போதும் பெருமையுடம் விளங்கி வருகிறது என்று பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி. செந்தில் ராஜ், ஒட்டபிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா, தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, பொறியாளர் கலை செல்வன், கருங்குளம் சேர்மன் கோமதி ராஜேந்திரன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவகுமா£ர், கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் அண்றோ, கூடுதல் ஆணையாளர் பாலசுப்பிரமணியன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவகுமார் , ஓவியர் சந்ரு, மனேன்மணியம் சுந்தரனார் பல்கலை பதிவாளர் அண்ணாதுரை , பேராசிரியர் சுதாகர், சிவகளை மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


