தூத்துக்குடி அருகேயுள்ள தங்கம்மாள்புரம் பரி.பேதுருவின் ஆலயத்தில் 86வது அசனப் பண்டிகை நடைபெற்றது.
தூத்துக்குடி சேர்வைகாரன்மடம் அருகே தங்கம்மாள்புரம் பரி.பேதுருவின் ஆலயத்தில் 86வது அசனப்பண்டிகை நேற்று நடைபெற்றது. முன்னதாக மாலை 4மணிக்கு அசன ஆரம்ப ஆராதனையை சேகர குரு இம்மானுவேல் நடத்தினார். குருவானவர் ஜான் வெஸ்லி தேவசெய்தியை அளித்தார். அசன விருந்து இரவு 11 மணி வரை நடைபெற்றது.
அசன விழா ஏற்பாடுகளை சபைத் தலைவர் எஸ்டிஆர் பொன்சிலன், பொருளாளர் எஸ்டிஆர் விஜயசீலன், மற்றும் அசன கமிட்டி பொறுப்பாளர்கள் ஜெபஸ்டின், பொன் கிருபாகரன், ஜெபச்சந்திரன், சாமுவேல், பால்ராஜ், துரைசிங், தர்மராஜ், செல்வின் தேவ ஆசீர் பீற்றர், சாம்ராஜ், ஜெயா, ஜெயசீலன், செல்வின், சேகர், ஜெயராஜ், ஜெபராஜ், பொன் சேகர், பாலசேகர், ராஜா, சௌந்திர பாண்டி, மணி பால்ராஜ் உள்ளிட்ட திருமண்டல நிர்வாகத்தினர் செய்திருந்தனர். விழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.


