தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் சாலைப் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி லெவிஞ்சிபுரம் 2வது தெரு மேல்பகுதியில் மழைநீர் வடிகால் மற்றும் சாலை அமைப்பதற்காக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர் இராமகிருஷ்ணன், வட்டச் செயலாளர்கள் சரவணன், சுரேஷ், மாமன்ற உறுப்பினர் முத்துமாரி மற்றும் திமுகவினர் உடன் சென்றனர்.


