சேரகுளம் அருகே இலுப்பைகுளத்தில் காணாமல் போன இருசக்கர வாகனம் மீட்பு. மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு.
கும்பகோணம் வில்லியவரம்பல் பகுதியைச் சேர்ந்தவர் துரை மகன் சதீஷ். இவர் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள இலுப்பைகுளத்தில் தங்கியிருந்து தனியார் கண்ட்ரக்சனில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 14.05.2023 ம் தேதியன்று இரவில் வேலையை முடித்து விட்டு வாடகை வீட்டின் காம்பவுண்டுக்குள் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு தூங்கியுள்ளார். அதிகாலை எழுந்து பார்த்த போது இருசக்கர வாகனம் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் இருசக்கவர வாகனம் கிடைக்காததால் சதீஷ் சேரகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இவரது புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சதீஷின் வாகனம் வெற்றிகுளம் காட்டுப்பகுதியில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை, உதவி ஆய்வாளர் சீதாராம், எஸ்எஸ்ஐ பிரேம்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு காட்டுப்பகுதியில் நின்ற வாகத்தை மீட்டனர்.
இதுகுறித்து போலீசார் வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


