செய்துங்கநல்லூர் வாரசந்தையில் மறுமுத்திரையிடாமல் பயன்பாட்டில் இருந்த 8 மின்னணு தராசுகளை தொழிலாளர் துறையினர் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் புதன்கிழமைதோறும் நடைபெறும் வாரசந்தைக்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், வாரசந்தையில் விற்கப்படும் பொருட்களின் எடை குறைவாக உள்ளதென அவ்வப்போது புகார் எழுந்து வருகின்றது.
இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர்துறை உதவி ஆணையாளர் திருவள்ளுவன் உத்தரவின்படி துணை ஆய்வாளர் ராம்மோகன் தலைமையில் தொழிலாளர்துறை ஆய்வாளர்கள் செய்துங்கநல்லூர் வாரச்சந்தையில் இன்று திடீர் ஆய்வில் மேற்கொண்டனர்.
ஆய்வின் போது, மறுமுத்திரையிடாமல் பயன்பாட்டில் இருந்த 8 மின்னணு தராசுகளை தொழிலாளர் துறையினர் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் பஜாரிலும் தொழிலாளர்துறையினர் மின்னணு தராசுகளை ஆய்வு செய்தனர்.


