சாத்தான்குளம் ஒன்றியத்தில் கோரிக்கையை வலியுறத்தி ஊராட்சி செயலர்கள் 5நாள்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
ஊராட்சி செயலர்களை டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தேர்வு செய்ய வேண்டும், ஊராட்சி செயலர்களுக்ககு பணிவிதி அரசாணை வெளியிட வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு தேர்வுநிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்கிட வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஊராட்சி செயலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கி 19ஆம்தேதி வரை போராட்டத்தில் ஈடுப்பட மாநில சங்க நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி சாத்தான்குளம் ஒன்றியத்தில் 23 ஊராட்சி செயலர்களில் 18 பேர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் ஊராட்சியில் பணிகள் பாதிக்கப்பட்டள்ளன


