படம் எஸ்ஏடி 16ஜமா: ஜமாபந்தி முகாமில் மனு பெறுகிறார்ஆதிதிராவிடர் நல துணை ஆட்சியர் நாணயம் .
படம் எஸ்ஏடி 16ஜமா1. : துரிதமாக நடந்த சாலைப்பணி.
சாத்தான்குளம், மே 16:
சாத்தான்குளம் தாலுகாவில் ஜமாபந்தி முகாம் செவ்வாய்க்கிழமை (16ஆம்தேதி) தொடங்கியது. . இதில் ஜமாபந்தி அதிகாரியாக மாவட்ட ஆட்சிய் செந்தில்ராஜிககு பதில் ஆதிதிராவிடர் நல துணை ஆட்சியர் நாணயம் பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். இதில் 145மனுக்கள் பெறப்பட்டது.
சாத்தான்குளம் வட்டத்தில் பசலி 1432க்கான வருவாய் தீர்வாயம் தணிக்கை எனும் ஜமாபந்தி முகாம் செவ்வாய்க்கிழமை ( 16ஆம்தேதி) தொடங்கியது. ஜமாபந்தி அதிகாரியான மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிக்கு பதில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துணை ஆட்சியர் நாணயம் பங்கேற்று மனுக்கள் பெற்றார். முதல் நாள் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் குறு வட்டத்துக்குள்பட்ட மீரான்குளம், 1, மற்றும் 2 கிராமம், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், கருங்கடல், கட்டாரிமங்கலம், பழங்குளம்ஆகிய கிராம மககளிடம் மனுககள் பெறப்பட்டது. இதில் பட்டாமாறுதல், முதியோர் உதவிதொகை கேட்டு உள்ளிட்ட 145 மனுக்கள் பெறப்பட்டன.இதில் சாத்தான்குளம் வட்டா ரதிகலா, தங்கையா, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் இளங்கோ, பிறதுறை அலுவலர்கள் ஜவகர்லால், ஜெயச்சந்திரன், பழனிவேலாயுதம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலாதேவி, மாசானமுத்து உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
2ஆம் நாளான புதன்கிழமை (17ஆம்தேதி) ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் குறுவட்டம் பிடானேரி, எழுவரைமுக்கி கிராமம், சாத்தான்குளம் குறு வட்டம் பன்னம்பாறை, சாத்தான்குளம், செட்டியிருப்பு, புதுக்குளம், ஆகிய கிராமத்துக்கும், 3ஆம் நாளான நாளை (18ஆம்தேதி) நெடுங்குளம், கோமானேரி, கொம்பன்குளம், தச்சமொழி ஆகிய கிராமமக்களுக்கும், பள்ளக்குறிச்சி குறு வட்டத்துக்குள்பட்ட முதலூர், பள்ளக்குறிச்சி, சாஸ்தாவிநல்லூர் ஆகிய கிராமத்துக்கும், 4ஆம் நாளான 19ஆம்தேதி கொம்மடிக்கோட்டை, நடுவக்குறிச்சி, அரசூர் பகுதி 1, 2, திருப்பணி புத்தன்தருவை, படுக்கப்பத்து ஆகிய கிராம மக்களிடமிருந்தும் மனுக்கள் பெறப்படுகிறது. ஆதலால் கிராம மக்கள் தங்களது நிறைவேறாக நீண்ட கால மனுக்கள், பிரச்சனைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் கேட்டும் விண்ணபிக்கலாம். முகாமில் ª பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் திறக்கப்ப்டடு 4மாதத்துககு மேலாகியும் அலுவலகம் முன்பிருந்து அதன் நுழைவு வாயில் வரை தார் சாலை போடப்படாமல் சரல் விரிக்கப்பட்டு காணப்பட்டது. இந்நிலையில் ஜமாபந்தி அதிகாரியாக மாவட்ட ஆட்சியர் வருவதாக அறிந்ததும், ஒப்பந்தகாரர் செவ்வாய்க்கிழமை காலை அதிரடியாக சாலை பணியை துரிதப்படுத்தி ஆட்சியர் வரும் நேரத்துக்குள் சாலைபணியை நிறைவு செய்தனர். ஆனால் ஆட்சியர் வராமல் வேறு அதிகாரி வந்து மனுக்கள் பெற்றார். இந்த சாலையை அடுத்துள்ள காவல் நிலையம் செல்லும் வரை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்


