சாத்தான்குளத்தில் ஜவுளி கடைக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சாத்தான்குளம் வடக்குரத வீதியைச் சேர்ந்தவர் சங்கரன் மகள் சுபலெட்சுமி (எ) சுவேதா (22). இவர் கடந்த 14ஆம்தேதி அவரது தோழி ஒருவருடன் ஜவுளி கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். அதன்பின் வீடு திரும்பவில்லையாம். அவர் எங்கு போனார் என தெரியவில்லை.
இதுகுறித்து அவரது தாயார் செல்வி சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் , சுரேஷகுமார் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்.


