படம் எஸ்ஏடி16சுண்.: சுண்டங்கோட்டை ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
படம் எஸ்ஏடி 16சுண்1.: கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றோர்.
சாத்தான்குளம், மே 16:
சுண்டங்கோட்டை அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் அஷ்டன பந்தன மகாகும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
சாத்தான்குளம் அருகே சுண்டங்கோட்டை அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் அஷ்டன பந்தன மகாகும்பாபிஷேக விழா 3நாள்கள் நடைபெற்றது. முதல் நாளான 13ஆம்தேதி மகா கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், அனுச்ஞை, அம்பாள் யாகசாலை எழு¢தருளல், முதல் யாக சாலை பூஜை, திரவிய ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும்,, 2ஆம் நாள் 14ஆம்தேதி 2ஆம் காலயாகசாலை பூஜை, மகா பூர்ணாஹிதி, மகா திபாராதனை, அம்பாளுக்கு அபிஷேகம், 3ஆம் காலயாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும். யந்திர ஸ்தாபனம், 3ஆம்நாளான திங்கள்கிழமை 4ஆம் காலயாகசாலை பூஜை, வேதி அர்ச்சனை, யாத்ராதானம், கும்பம் எழுந்தருளல், விமானம் மற்றும் ஸ்ரீமுத்தாரம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து திபாராதனை நடைபெற்றது. பகல் 12மணிக்கு விஷேச அலங்கார தீபாராதனை , பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. கும்பாபிஷேக பூஜைகளை திருச்செந்தூர் முத்து அய்யர் குழுவினர் நடத்தினர்.
இதனைதொடந்து வைகாசி கொடை விழா தொடங்கியது. இவ்விழா நாளை 18ஆம்தேதி வரை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


