தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் கோவில்பட்டிக்கு புறப்பட்டுச் சென்ற தனியார் பேருந்து எத்திலப்பன் நாயக்கன்பட்டியில், நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலர் படுகாயம் அடைந்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


