கோவில்பட்டியை அடுத்துள்ள அய்யனேரியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கோபால்சாமி வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு மற்றும் கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 3 பவுன் தங்க மோதிரங்கள், தங்க டாலர், தங்க காது வளையம், தங்க கம்மல் மற்றும் ரொக்கப்பணம் ரூ.4000 திருடு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


