திருச்செந்தூரில் காதலி பேச மறுத்ததால், அவரது வீட்டின் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் கோயில் தெரு, அண்ணா காலனியைச் சோ்ந்த திருவேங்கடம் மகன் பேச்சிமுத்து (25). இவா், திருச்செந்தூா் கோயில் அன்னதான திட்டத்தில் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகிறாா். இவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில் பேச்சிமுத்துக்கும், உடன் பணியாற்றும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோா் பேச்சிமுத்துவை கண்டித்துள்ளனா். இதையடுத்து, பேச்சிமுத்து நேற்று முன்தினம் இரவு அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று கதவை தட்டியதாகவும், அந்தப் பெண் அவரிடம் பேச மறுத்து, கதவை திறக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பேச்சிமுத்து, அந்தப் பெண்ணின் வீட்டின் முன்பு தன் உடம்பில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற அவரது நண்பா்கள் தீக்காயமடைந்த பேச்சிமுத்துவை மீட்டு, திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் திங்கள்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


