எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய
சக்திநாதன் எனும் சகாப்தம் எனும் வாட்டர் வாரியர் பொறியாளர் சக்தி நாதன் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா நடந்தது.
பாளை மகராஜநகர் ஜெயந்திரா பள்ளியில் பொறியாளர் சக்திநாதன் இரண்டாம் ஆண்டு நினைவு விழா, புத்தக வெளியிட்டு விழா, விருது வழங்கும் விழா என்ற முப்பெரும் விழா நடந்தது. சிறப்பு விருந்தினர்கள் சக்திநாதன் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதன் பின் புத்தகம் வெளியிடு மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது. பாளை ஜெயந்திரா பள்ளி தளாளார் ஜெயந்திரா மணி வரவேற்றார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு நூலை பற்றி விளக்கவுரையாற்றினார். அதன் பின் நூல்வெளியிட பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமி நாதன் நூலை வெளியிட நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் மரு. கார்த்திகேயன் பெற்றுக்கொண்டார். அதன் பின் விருது வழங்கும் விழா நடந்தது. மணிமுத்தாறு பட்டாணியன் காமாண்டர் கார்த்திகேயன், வி.எம். சத்திரம் டிரஸ்ட், கோபாலசமுத்திரம் சி.ஜி.ஜி பவுண்டேசன் சவரிவாசன், முக்கூடல் புகழ் டிரஸ்ட் எட்வின் ஹென்றி ஆகியோருக்கு சக்தி விருது வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கார்த்திகேயன் பேசும்போது, தாமிரபரணியை தொடர்ந்து சுத்தப்படுத்தும் திட்டம் மாவட்ட நிர்வாகத்திடம் உள்ளது. பாபநாசத்தில் இருந்து சீவலப்பேரி வரை அதை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் அதற்கான முழு வடிவம் கொடுத்து பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் செய்து முடிப்போம் என்று பேசினார்.
நீதியரசர் சுவாமி நாதன் பேசும் போது, நல்லதொரு ஆட்சியாளர்கள் இருந்தாலும் அவர்கள் நல்ல திட்டங்களை செயல்படுத்த பல இடையூறு இருக்கும் . அந்த இடையூறுகளை தவிர்க்க உயர்நீதி மன்றம் உ த்தரவு உதவியாக இருக்கும். அது மட்டுமல்லாமல் நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்த மாவட்ட ஆட்சியாளர்களின் உதவி நிச்சயம் தேவை. அந்த வகையில் நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் செயல்பாடு மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. நதியை பாதுகாக்கும் அவசியத்தினை பொதுமக்கள் புரிந்து கொள்ளவும் வழி வகை செய்யவேண்டும் என்றும் அவர் பேசினார்.
அமரவேல் பாபு நன்றி கூறினார்.
விழாவில் சக்தி நாதன் அவர்களின் தந்தை கணபதி, நம் தாமிரபரணி அமைப்பினை சேர்ந்த முத்து கிருஷ்ணன் .சாமி நல்லபெருமாள், வித்தியாசாகர், சிகாமணி, கல்யாண ராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


