தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட வருவாய் கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் உடனடியாக தீர்த்து வைக்கும் பொருட்டு ஆண்டுதோறும் மே மாதங்களில் ஜமாபந்தி நடைபெறும்.
இதன்படி இந்த ஆண்டிற்கான ஜமாபந்தி ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மே 16ஆம் தேதி தொடங்குகிறது. மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரான அபுல்காசிம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.
ஜமாபந்தியின் முதல் நாளான மே 16ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு உட்பட்ட வல்லநாடு உள்வட்ட பகுதிகளான கலியாவூர், ஆலந்தா, பூவாணி, சிங்கத்தாகுறிச்சி, வடவல்லநாடு, வல்லநாடு கஸ்பா, ஆழிகுடி ஆகிய பகுதிகளுக்கும், மே 17ஆம் தேதி முறப்பநாடு, புதுகிராமம், கீழபுத்தனேரி, முறப்பநாடு கோவில்பத்து, வசவப்பபுரம் கிராமங்களுக்கும், தெய்வச்செயல்பும் உள்பட்ட பகுதிகளான செக்காரக்குடி பகுதி 1, மீனாட்சிபுரம், செக்காரக்குடி பகுதி 2, வடக்கு காரசேரி, தெய்வச்செயல்புரம் ஆகிய பகுதிகளுக்கும், 18 ஆம் தேதி செட்டிமல்லன்பட்டி, எல்லைநாயக்கன்பட்டி, கீழவல்லநாடு, நாணல்காடு, மணக்கரை, ஆழ்வார்கற்குளம், ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி ஆகிய பகுதிகளுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.
வருகின்ற 19ஆம் தேதி செய்துங்கநல்லூர் உள்வட்ட பகுதிகளான விட்டிலாபுரம், விட்டிலாபுரம் கோவில்பத்து, முத்தாலங்குறிச்சி, செய்துங்கநல்லூர், கருங்குளம், தெற்குகாரசேரி, சேரகுளம், வல்லகுளம் ஆகிய பகுதிகளுக்கும், 23ஆம் தேதி கால்வாய் மற்றும் ஸ்ரீவைகுண்டம் உள்பட்ட பகுதிகளான வேலூர் கஸ்பா, வேலூர் ஆதிச்சநல்லூர், தோழப்பன்பண்ணை, பத்மநாபமங்கலம், அணியாபரநல்லூர், ஸ்ரீமூலக்கரை, ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளுக்கும், 24ஆம் தேதி வேளூர் புதுக்குடி, ஸ்ரீபரங்குசநல்லூர், கீழப்பிடாகை, வரதராஜபுரம், திருப்புளியங்குடி, பராக்கிரமபாண்டி, பேரூர் ஆகிய பகுதிகளுக்குமான ஜமாபந்தி நடைபெறுகிறது.
மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரான அபுல்காசிம் தலைமையில் நடைபெறும் ஜமாபந்தியின் போது குறிப்பிட்ட தேதியில் காலை 10 மணி முதல் அந்தந்த கிராமமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து தீர்வுகளை உடனடியாக பெறலாம் என ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.


