பொத்தக்காலன்விளை,சாஸ்தாவிநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இன்று 12.05.2023 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நிர்வாகக்குழு கூட்டம் மற்றும் கடன் வழங்கும் நிகழ்வு சங்கத் தலைவர் *திரு.லூர்துமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சங்க செயலர் பெனிஸ்கர் கடன் அனுமதி தொடர்பான தீர்மானங்களை வாசிக்க தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து சங்க 20 உறுப்பினர்களுக்கு கால்நடை பராமரிப்பு கடனாக ரூ.14.84 இலட்சமும்,22 சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.22.00 இலட்சம் கடனும்,2 விவசாயிகளுக்கு விவசாய கடனாக ரூ.3.20 இலட்சமும் ஆக மொத்தம் ரூ.40.04 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சங்க துணைத் தலைவர் திரு.ராபின்சன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் திரு.ரவிச்சந்திரன்,திரு.அமல்ராஜ்,திரு.அருள்ராஜ், உசா ஆனந்தி மற்றும் சங்க வாடிக்கையாளர்கள் ஜெகநாதன்,பூலோகபாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்ட ஏற்பாடுகளை சங்க பணியாளர்கள் சார்லஸ்,ராஜன்,பொன்சாமி முருகேசன் செய்திருந்தனர்.சங்க கணக்காளர் சுடலைகண்ணு நன்றி கூறினார்.


