. படம் எஸ்ஏடி 12கட் : அபிஷேகம் பூஜையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஸ்ரீஅழகி. கூத்தர்.
சாத்தான்குளம், மே 12:
கட்டாரிமங்கலம் ஸ்ரீஅழகிய கூத்தர் கோயிலில் சித்திரை திருவோணம் அபிஷேகம் பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் நடராஜரின் பஞ்ச விக்ரஹ ஸ்தலமான அருள்தரும் ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீஅழகியகூத்தர் திருக்கோயிலில் நடராஜரின் ஆறு அபிஷேகங்களில் ஒன்றான சித்திரை திருவோணம் நடராஜர் அபிஷேகம் சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பூஜையையொட்டி காலை 9 மணிமுதல் ஸ்ரீ அழகியகூத்தர் அருட்பணி மன்றத்தினரின் திருமுறை பாராயணம் நடந்தது.காலை 9 மணிமுதல் ஹோமம், காலை 10 மணிமுதல் அபிஷேகம், தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பங்கேற்ற பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.
பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


