ஆத்தூர் அருகே ஆட்டோ மோதி சாலையில் நடந்து சென்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியை சேர்ந்தவர் முஸ்தபா மகன் முகமது இப்ராஹிம் (34). இவர் நேற்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முக்காணி ரவுண்டானா அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த ஆட்டோ அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப் பதிந்து ஆட்டோவை ஓட்டி வந்த ஏரல் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மகன் மகேஷ் (27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


