தட்டார்மடம் அருகே திருமணமான 7 மாதத்தில் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகேயுள்ள பிச்சிவிளையைச் சேர்ந்தவர் வீரலிங்கம் மகன் சுடலைமணி (37). இவருக்கு மது பழக்கம் இருந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் இவரது முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை 2வதாக திருமணம் செய்தாராம்.
இவர் தினசரி மது அருந்தி வருவதால் அந்த பெண்ணும் அவரை பிரிந்து தாயார் வீட்டுக்குச் சென்று விட்டாராம். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுடலைமணி நேற்று இரவு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக தட்டார்மடம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பவுல் லோஸ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


