தமிழ்நாடு அரசு பொதுநலத்துறை தூத்துக்குடி மாவட்ட நூலக ஆணைக் குழுவின் கீழ் இயங்கக்கூடிய ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்தநல்லூர் அரசு பொதுநலத்தில் வாசகர் வட்ட கூட்டம் இன்று மாலை 5 மணி அளவில் நடந்தது கூட்டத்திற்கு வாசகர் வட்ட தலைவர் திருமலை நம்பி தலைமை வகித்தார் தொடர்ந்து நூலகத்தில் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்தி நூலக பயன்பாட்டை அதிகப்படுத்தவும் நூலகத்தில் புரவலர் எண்ணிக்கை அதிகப்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நூலக புறவலாக தேர்வு செய்யப்பட்ட ரயில்வே ஓய்வு பெற்ற சண்முகவேல் என்பவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட பொது நூலகத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய புத்தக கண்காட்சியை வெற்றி பெற செய்த அனைத்து ஏற்பாட்டாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது இதில் கோபாலகிருஷ்ணன் சாமிநாதன் பரமசிவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்


