கருங்குளம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையின் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் கிசான் கோஸ்தீஸ் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சேரகுளம் கிராமத்தில் இன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் தலைமையேற்று வேளாண்மை உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் வேளாண்மை அறிவியல் மைய பொருட்சிறப்பு அறிஞர் முருகன் மண் மாதிரி சேகரித்தல், செம்மை நெல் சாகுபடி, உளுந்து சாகுபடி, உயிர் உரங்கள் பயன்படுத்துதலின் முக்கியத்துவம் குறித்து கூறினார்.
கருங்குளம் துணை வேளாண்மை அலுவலர் பரமசிவன் வேளாண் அடுக்கு சிறுதானிய சாகுபடி மற்றும் முக்கியத்துவம் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பால்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கருங்குளம் உதவி தொழில்நுட்ப மேலாளர் முத்துசங்கரி உழவன் செயலி பயன்பாடு குறித்து விளக்கமளித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் நூர்தின், அட்மா தொழில்நுட்ப மேலாளர்கள் ராஜலட்சுமி, முத்துசங்கரி, மகேஸ்வரி மற்றும் உழவர் நண்பர் ஆறுமுகம் ஆகியோர் செய்திருந்தனர்


