திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் மண்கலகுடியிருப்பு தேவர் தெருவைச் சேர்ந்தவர் இளைஞர் இசக்கிமுத்து. 24 வயதான இவர் இன்று தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் மருதூர் அணைக்கட்டில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்தார். அணையில் இருந்து குதித்த போது கழுத்தில் இசக்கிமுத்துவுக்கு அடிபட்டுள்ளது.
உடனே அருகில் இருந்த நண்பர்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


