கோவில்பட்டியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதபாமாக உயிரிழந்தார். தூத்துக்குடி சுந்தரவேல் புரம் 6வது தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் தர்மராஜ் (30), இவர் கோவில்பட்டி நாலாட்டின்புதூர் மெயின் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஒரு லாரி, பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைநத தர்மராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதாதேவி வழக்குப் பதிந்து, லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


