தூத்துக்குடி, கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பூவரசன். 24 வயதான இவர் இன்று தனது நண்பர்களுடன் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்ற பூரவசன் தண்ணீரில் மூழ்கினார். இதையடுத்து அவரது நண்பர்கள் அவரை தேடியபோது சிறிது நேரத்தில் பூவரசன் இறந்து மிதந்துள்ளார். இதனால் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஏரல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுதது சம்பவ இடத்திற்கு வந்த ஏரல் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா மற்றும் போலீசார் பூவரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


