ஒரு கோடி பனை மரங்களை வளர்ப்பதற்காக பாடுபட்டு வருகின்றமைக்காக தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர் எஸ் ஜே கென்னடிக்கு கல்வித்தந்தை கர்மவீரர் காமராஜர் விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது
தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்து ஏழை, எளிய, மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், பெண்களின் முன்னேற்றத்துக்காகவும். குழந்தை கல்வி வளர்ச்சிக்காகவும், மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்விற்க்காகவும், சுகாதாரப் பணிகளுக்காக பல்வேறு சேவைகளை செய்து வருகிறார் மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க, நிலத்தடி நீரை மேம்படுத்த, புயல், சூறாவளி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களை தடுக்கக்கூடிய தமிழர்களின் தேசிய மரமான பனை மரங்களை ஒரு கோடி வளர்க்க வேண்டும் எந்த உன்னதமான குறிக்கோளோடு கடந்த 6 வருடங்களாக கடற்கரை, தீவு பகுதியிலும், ஆற்றங்கரை, குளத்தங்கரை, வாய்க்காங்கரை போன்ற நீர் பிடிப்பு பகுதிகளிலும், சாலை ஓரலிலும் அரசு புறம்போக்கு இடங்களிலும் தொடர்ந்து பனைமர விதைகளை விதைத்து வருகிறார். தற்போது வரை 74, 86,437 பனை மர விதைகளை விதைத்துள்ளார். இந்த சேவைகளை பாராட்டுகின்ற வகையில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் தனியார் மண்டபத்தில் விடுதலை சிறுத்தை கட்சி இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் நடந்த விழாவில் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடிக்கு கல்வித் தந்தை கர்மவீரர் காமராஜர் விருதினை மண்டல செயலாளர் சொ.சு. தமிழினியன் வழங்கி, வாழ்த்தி பேசினார். விழாவில் முன்னதாக மாவட்ட அமைப்பாளர் யாசர் அரஃபத் வரவேற்றார் மாவட்டத் தலைவர் முரசு தமிழப்பன் தலைமை தாங்கினார். இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலைச் செழியன், தமிழ் குட்டி, திருச்செந்தூர் நகர செயலாளர் சங்கத்தமிழன் உடன்குடி ஒன்றிய செயலாளர் தமிழ்வாணன் மற்றும் சமூக ஆர்வலர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் பெண்கள் திரளானூர் கலந்து கொண்டனர்.


