தூத்துக்குடி 3ம் மைல் பகுதியில் நடைபெறும் பாதாள சாக்கடை பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி பிரதான சாலையான 3ம் மைல் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவிக்கையில், இப்பணிகைள விரைவுப்படுத்தி முடிக்கப்பட்டு நெடுஞ்சாலை துறை கட்டுபாட்டின் கீழ் உள்ள குண்டும் குழியுமான சாலையை முழுமையாக சீரமைக்கப்பட்டு பணிகள் நிறைவு பெற்று ஞாயிறுகிழமைக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.
அதுவரை அருகிலுள்ள பக்கிள் ஓடை சாலையையும் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மேயர் கேட்டுக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி விவிடி மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளுக்கு வழங்கப்படும் நீரின் அளவு மற்றும் நீர் தேக்க தொட்டிக்கு வரும் நீரின் அளவையும் மேயர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது கவுன்சிலர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் சென்றனர்..


