தமிழ்ச் செம்மல் விருது பெற்ற முன்னாள் தமிழாசிரியருக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழ்ப்பணி மற்றும் எழுத்துப்பணியினைப்பாராட்டி ஆண்டுதோறும் தமிழ்ச் செம்மல் விருது தமிழக அரசு சார்பில் மாவட்டத்தில் ஒரு தமிழறிஞருக்கு வழங்கப்பட்டு வருகிறது இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாகத் தமிழ்ப்பணியாற்றிய புதியம் புத்தூர் புலவர் கணேசன் 2021ம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற புலவர்கணேசன் பேரிலோவன் பட்டி நல்லழகு நாடார் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியதோடு பதவி உயர்வு பெற்று அதே பள்ளியில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார் தற்போது புதியம்புத்தூர் இந்து நாடார் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட மழலையர் துவக்கப்பள்ளிச் செயலராகவும் செயலாற்றி வருகிறார் அவரிடம் படித்த மாணவர்கள் பலரும் சிறந்த பட்டிமன்றப் பேச்சாளராகவும் கவிஞர்களாகவும் தமிழகமெங்கும் சிறந்து விளங்குகின்றனர். அவர் தம் ஆசிரியப் பணி யோடு ஆற்றிய தமிழ்த் தொண்டுக்குத் தமிழ்ச் செம்மல் விருது பெற்றதைப் பாராட்டித் தூத்துக்குடி மாவட்ட மழலையர் துவக்கப்பள்ளிகள் சங்கத்தின் சார்பில் தலைவர் வல்லநாடு பாரதி சங்கரலிங்கம் செயலர் ஜோசப் ஆகியோர் நேரில் சந்தித்துப் பொன்னாடை அணிவித்துக் கேடயம் வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.


