தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் “புத்தாக்க தொழில் முனைவோர் உருவாக்கத் திட்டத்தின் கீழ் தொழில் மாணவர்ளுக்கான பயிற்சி நடைபெற்றது.
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் புத்தாக்க தொழில் முனைவோர் உருவாக்கத் திட்டத்தின் கீழ் சென்னையிலுள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டு ஆணையத்தின் நிதி உதவியுடன் மாணவர்களுக்கான தலைமை நிர்வாகத்திறன் மற்றும் சிந்தனை வடிவமைப்பு குறித்த இரண்டு நாள் பயிற்சிகள் நடைபெற்றன. இப்பயிற்சியில் மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படக்கூடிய பல்வேறு கல்லூரிகளில் இருந்தும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் இருந்தும் முறையே 48 மற்றும் 50 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இதன் தொடக்க விழாவில் மீன்பதன தொழில்நுட்பத்துறை உதவி பேராசிரியர் மற்றும் தலைவர் பா. கணேசன் வரவேற்புரையாற்றினார். பயிற்சியாளர் எம். திலிபன் குமார் மாணவர்களுக்கு தொழில் முனைவில் வெற்றி காண்பதற்கான வழிமுறைகளை பயிற்றுவித்தார். சிந்தனை வடிவமைப்பு பயிற்சியின் போது சரவணன் மாணவர்களின் சிந்தனை ஆற்றலை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகளை பயிற்றுவித்தார். நிறைவு விழாவில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் (பொறுப்பு) ந.வ. சுஜாத்குமார் தலைமை வகித்து பயனாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.


