திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள நொச்சிகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் இவரது மகன் ஆறுமுகம் (30) கூலி தொழிலாளியான இவர் தனது மனைவியான சந்தியா (22) மற்றும் 2வயது குழந்தையான மகள் சுவிந்தியா ஆகிய மூன்று பேரும் கருங்குளத்தில் இருந்து பைக்கில் செய்துங்கநல்லூர் வழியாக தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கருங்குளம் குளம் பகுதியில் திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் எதிரே ஒரு கார் வேகமாக திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு வந்துகொண்டிருந்தது. அந்த காரை திருநெல்வேலி மாவட்டம் கயத்தாறு பகுதியை சேர்ந்த ஷேக் அப்துல் காதர் (32) ஓட்டிக் கொண்டு வந்தார். எதிர்பாராத விதமாக காரும் பைக்கும் நேருக்கு மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆறுமுகம் அவரது மனைவி சந்தியா மற்றும் மகள் சுவிந்தியா ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.

கார் மோதிய வேகத்தில் அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி வாழை பயிரிடப்பட்டிருந்த வயலில் பாய்ந்தது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் மூவர், காரை ஓட்டி வந்த ஷேக் அப்துல் காதர் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் செய்துங்கநல்லூர் போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


