தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்காக மண் எடுக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ஆற்று வண்டல் தேற்றும் பயிரை” என்ற பழமொழிக்கேற்ப, அரசாணை 50, கனிம வளத்துறை நாள்:27.04.2017-ன்படி, பொதுப் பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள 564 குளங்கள் / கண்மாய்கள் / ஏரிகள் / நீர்த் தேங்கங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் வண்டல் மண் எடுக்கப்படும் அளவு, வண்டல் மண் அளவு ஆகிய விவரங்கள் மாவட்ட அரசிதழ் 20.05.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
விவசாய பயன்பாட்டிற்காக மண் எடுக்க விண்ணப்பிக்கும் நபர்கள் அவர்களின் பெயரில் அல்லது விவசாயம் செய்பவரின் பெயரில் கிராம கணக்குகளின்படி நிலங்கள் உள்ளது என்பதற்கு தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து சான்றிதழ் பெற்று வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பித்த பிறகு தூத்துக்குடி, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அனுமதி பெற்று விவசாயிகள் பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


