தேசிய ஒருமைப்பாட்டு நாள் என்பது இந்தியாவில் அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படுகிறது. இது 2014-ல் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பில் முக்கிய பங்காற்றிய சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இந்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய ஒருமைப்பாட்டு நாளிற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதன்படி, ” நம் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கான உண்மையான மற்றும் சாத்தியமான அச்சுறுத்தல்களைத் தாங்குவதற்கும் நமது தேசத்தின் உள்ளார்ந்த வலிமை மற்றும் மேம்பாட்டினை உறுதிப்படுத்த ஒரு வாய்ப்பை இந்நாள் வழங்கும்” என்பதாகும்.


