ஸ்ரீவைகுண்டம் குமர குருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர்படை சார்பில் உலக வனநாள் கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் இன்று தேசிய மாணவர்படையின் சார்பில் உலக வன நாள் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசிவன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளி ஆசிரியர்கள் வெங்கடாசலபதி, குப்புசாமி, பாலசுப்பிரமணியன் மற்றும் ரெங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுளை நட்டனர். நிகழ்ச்சிகளை தேசிய மாணவர்படை ஆசிரியர் மாணிக்கம் செய்திருந்தார்.


