பொருநை ஆற்றின் நாகரிகம் என்ற தலைப்பில் 2023 நெல்லை பொருநை புத்தக கண்காட்சியில் பொருநை மைந்தன் காஜா முகைதீன் ஒரு புத்தகம் வெளியிட்டு இருந்தார். அந்த புத்தக வாழ்த்துரைக்காக நானும் சென்றிருந்தேன். அந்த புத்தகத்தில் தாமிரபரணியில் கலக்கும சாக்கடை குறித்து குறிப்பிட்டு இருந்தார். அதில் உள்ள குறிப்புகளை காணுவோம்.
பொருநையில் ஏற்படும் முதல் மாசு “பாபநாசம் அணையிலிருந்து சில மீட்டர் தூரத்தில் உள்ள சொரிமுத்தையனார் கோவில் அருகே தான் முதல் மாசு பொருநையில் கலக்கிறது. ஆண்டு தோறும் ஆடி அமாவாசைத் திருவிழாவிற்காக இங்கு வரும் பல லட்சம் பக்தர்கள், காட்டில் கூடாரம் அமைத்து 2 வாரம் தங்கி பொருநைக் கரையைத் திறந்த வெளிக் கழிப்பிடமாக மாற்றிவிடுவார்கள், லட்சக் கணக்கானோர் இப்படி நதி நீர்க்கரையை அசுத்தப்படுத்துவது வேறு எந்த நாட்டிலும் காண இயலாத அதிசயம்.
தற்போது இதை கட்டுப்படுத்த தமிழக அரசும் வனத்துறையும் முயற்சி எடுத்து வருகிறது. கிட்டத்தட்ட 50 சதவீதம் மாசு படுவதை தடுத்து வருகிறது.
அதைத் தாண்டினால் அகஸ்தியர் அருவி. அது அருவி. அது சுற்றுலாப் பயணிகளைச் சுண்டி இழுக்கும் இடம் என்பதால் அங்கே திரளும் உல்லாசப் பயணிகள் பிளாஸ்டிக் டம்ளர்கள், பிராந்தி, விஸ்கி பாட்டில்கள், கேரி பேக்குகளை ஆற்றில் வீசுகிறார்கள். அதன் பிறகு சமவெளி. அங்கே ஆற்றை மாசுபடுத்தும் முதல் தொழிற்சாலை மதுரா கோட்ஸ் ஆலைதான். ஒரு நாளைக்கு 25 லட்சம் லிட்டர் கழிவு நீரை இரவு நேரங்களில் அது திறந்து விடுகிறது. அந்தக் கழிவு நீரில் சல்பைடு, குளோரைடு, பாதரசம் போன்றவை இருப்பதால் நதியே கருப்பாகி விடுவதுடன் மீன்களும் அடியோடு அழிந்து விடுகின்றன. அதையடுத்து அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக் குறிச்சி. அங்கே வசிப்பவர்களின் செப்டிக் டேங்க்கே பொருநை தான். இப்படி மனிதக்கழிவு, ரசாயனக் கழிவுகளைச் சுமந்து கொண்டுதான் பொருநை நெல்லை நகருக்குள் நுழைகிறது.
நெல்லை நகரில் கருப்பந்துறையிலிருந்து வெள்ளக் கோயில் வரை 21 இடங்களில் ஆற்றில் சாக்கடை நீர் கலக்கிறது. கலெக்டர் அலுவலகம் அருகில் திறந்தவெளி கழிப்பிடமாகவும், பன்றிகள் வளர்க்கும் இடமாகவும் பொருநைக்கரை உள்ளது. வண்ணாரப் பேட்டையில் பணிமனை யிலிருந்து திறந்து விடப்படுகின்றன. நெல்லை லாட்ஜூகளின் விடப்படுகின்றன. போக்குவரத்துக்கழகப் அரசு ஆயில் கழிவுகள் அப்படியே ஆற்றிற்குள் அந்த இடத்தில் ஆற்று நீரே கருப்பாய்க் ஜங்ஷனில் உள்ள அனைத்துக் கடை, கழிவுகளும் சிந்து பூந்துறையில் ஆற்றில் நெல்லை நகரில் மட்டும் ஒரு நிமிடத்திற்கு 11,000 லட்சம் லிட்டர் கழிவு நீர் பொருநையில் சங்கமம் ஆகிறது. இரண்டு மாவட்டங்களிலும் சேர்ந்து மொத்தம் 686 இடங்களில் பொருநை சாக்கடை நீர் கலக்கிறது. பொருநை ஆறு முழுக்க வியாபித்திருக்கும் போக்கையும் நீர்க்கருவைகளும், அமலைச்செடிகளும் தண்ணீரின் மாற்றிவிடுகின்றன. மேலும், பொருநைக் கரையில் மட்டும் 286 மயானங்கள் இருக்கின்றன. இறந்தவர் களின் உடல்களை எரித்துவிட்டுச் சாம்பல் கலசங்களை அப்படியே ஆற்றுக்குள் வீசிவிட்டுச் செல்வதால் பொருநை பெரும் அளவு மாசுபடுகிறது.
ஒரு காலத்தில 1260 மீன் இனங்கள் இருந்த பொருநையில் இன்று வெறும் 65 வகை மீன் இனங்களே இருப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. மணல் வரலாறு ஆற்றில் ஒரு டன் மணல் உருவாவதற்கு 150 ஆண்டுகள் ஆகும். அணைகள் இல்லாத ஆற்றில் ஆண்டுக்கொரு முறையாவது கரை புரண்டு வெள்ளம் வந்தால் 5 ஆண்டுகளில் 1.செ.மீ. ஆழம் மணல் உருவாகும் என ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளார்கள். பெருக்கெடுத்து ஓடிப் பாய்ந்து வரும் தண் பொருநை, வழி எங்கும் இடித்து வரும் பெரிய, சிறிய கற்கள், பருக்கைக் கற்கள், பெரிய, சிறிய பாறைகள் ஆற்றின் உள்ளும் இருகரைப் படுகைகளிலும் படிந்து ஒதுங்குவதால் ஆற்றுப் படுகை மணல் வெளியாக மாறுவது இயற்கை. வெள்ளத்தின் வேகத்தில் ஒன்றோடொன்று மோதி உராய்ந்து, நொறுங்கி, மணற்றுகள் காலங் காலமாக ஆற்றின் கரைகளில் மணற் பரப்பாகி கனிம வளம் மிக்க செம்புத் துகள்கள் கலந்து செம்பு வண்ணமாக இருந்ததால் வரலாற்றுக்கு முந்திய காலத்திலேயே பொருநை ஆற்றைச் செம்பு வண்ணி என்றனர்.
இச்சொல்லே காலப் போக்கில் பொருநை என மாறியது. காவிரி ஆற்று மணலில் பொன் துகள்கள் கலந்திருந்தால் சங்க நூல்களில் காவிரி ஆற்றைப் பொன்னி என்று குறிப்பிட்டனர்.
பொருநையின் மொத்த நீளமான 120.கி.மீ. வனப்பகுதி போக, மீதம் உள்ள 80.கி.மீ சமவெளியில் சுமார் 5 முதல் 10 அடி ஆழத்துக்கு மணல் அள்ளப்பட்டது. இத் திருட்டைத் தடுக்க இந்திய கம்னியூஸ்ட் கட்சிதலைவர் நல்லகண்ணு மதுரை உயர்நீதிமன்றம் சென்றார். அவர்களோடு டாக்டர் அருணாச்சலம் மற்றும் உறுப்பினர்களும் சேர்ந்து வாதிட்டுத் பொருநையில் மணல் எடுக்க 5 ஆண்டு காலம் தடை வாங்கினர். ஆனால் தொடர்கிறது மணல் கொள்ளை.
இந்த நதியைக் காக்க வேண்டியது அரசா? மக்களா? அதிகாரிகளா? மாநகராட்சியா? மணல் திருட்டைத் தடுப்பது யார்? என்று மக்களிடம் கேட்கின்றோம். நமக்கு நன்னீர் வேண்டுமென்றால் மணல் எடுப்பதை மக்கள் தடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் தன் தாயைக் காப்பது போல் தான் பொருநையைக் காப்பாற்ற மனதில் உறுதிமொழி எடுக்கவேண்டும். என்று அந்த நூலில் அவர் பல தகவல்களை கூறுகிறோம்.
மேலும் அவர் கூறும் தகவல் மனித மரணத்தனை பற்றி கூறுகிறது. அது என்ன தொடர்ந்து காணுவோம்.
(நதி வற்றாமல் ஓடும்)


