தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள நாணல்காடு வடக்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி கொம்பையா. இந்த நிலையில் கடந்த வாரம் நாணல்காடு கிராமத்திற்கு வல்லநாட்டை சேர்ந்த முருகன் மகன் உலகுமணி என்ற வாலிபர் நண்பர்களை அழைத்துக்கொண்டு வந்துள்ளார். அப்போது கொம்பையாவுக்கும் உலகுமணிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை கொம்பையா வீட்டிற்கு உலகுமணி வந்து தகராறு செய்து கொம்பையாவை தாக்கியுள்ளார். இதுகுறித்து கொம்பையா முறப்பநாடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து உலகுமணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


