தூத்துக்குடியில் பொதுமக்களும், வியாபார பெருமக்களும் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்குமாறு மாநகராட்சி மேயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துனிப்பைகளை மேயர் ஜெகன் பெரியசாமி அறிமுகப்படுத்தினர். பின்னர் அவர் கூறுகையில், பொதுமக்களும், வியாபார பெருமக்களும் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க வேண்டும். தூத்துக்குடி மாநகர பகுதியில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு தொடர்ந்து தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
கடந்த காலங்களை போல் அல்லாமல் இந்தாண்டு மழைநீரை தேங்க விடமாட்டோம். குறிப்பாக அதிக அளவில் பாதிக்கப்படும் பிரையண்ட்நகர், சிதம்பரநகர், ரஹ்மத்நகர், ஸ்டேட் பேங்காலனி அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்காத வகையில் வடிகால் அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. மற்ற பகுதிகளிலும் முடிந்த அளவிற்கு மழைகாலத்திற்கு முன்பு பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.


