தென் மண்டல அளவில் தமிழ்நாடு கர்நாடகா ,கேரளா ,ஆந்திரா ,தெலுங்கானா புதுச்சேரி ,அந்தமான் நிக்கோபார் பங்கு பெரும் 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி போட்டி ராமநாதபுரத்தில் மார்ச் 19 முதல் 28 வரை வேலூ மாணிக்கம் செயற்கை இலை ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றவுள்ளது.
இப் போட்டியில் தமிழக மகளிர் ஹாக்கி அணிக்காக விளையாட கோவில்பட்டி எஸ். எஸ். துரைச்சாமி நாடார் – மாரியம்மாள் கலை கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி A. மணிமொழி தேர்வு பெற்றுள்ளார்.
தமிழக அணிக்காக விளையாட உள்ள வீராங்கனையை கல்லூரி செயலாளர் கண்ணன் ,முதல்வர் முனைவர் செல்வராஜ், உடற்கல்வி இயக்குனர் சந்திரன், ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் .குரு சித்ர சண்முக பாரதி மற்றும் ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி சட்ட ஆலோசகர் பெரியதுரை மற்றும் பலர் பாராட்டினர்


