தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ள கலியாவூர் மெயின் ரோட்டில் வசிப்பவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் பாலலட்சுமி (22). இவர் கடந்த சில மாதங்களாக வயிறு வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


