நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் திருநெல்வேலி பிரமிள் நூலகம் இணைந்து உருவாக்கிய நூல் வரலாற்றில் திருநெல்வேலி . இந்த நூலை பூர்ணா தொகுத்துள்ளார். இந்த நூல் வெளியிட்டு விழா பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நூலில் திருநெல்வேலியை பற்றிய 32 கட்டுரைகள் உள்ளன.
நூல் வெளியிட்டு விழா மாலை 5 மணிக்கு நடந்தது.. நியூ செஞ்சுரி புத்தக நிறுவன மேலாண்மை இயக்குனர் சண்முகம் சரவணன் , புதிய ஆராய்ச்சி பொறுப்பாசிரிரியர் முனைவர் நா. இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலர் லெ .மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். நியூ செஞ்சுரிபுத்தக நிறுவனம் மண்டல மேலாளர் கிருஷ்ண மூர்த்தி வரவேற்றார். நூலை தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய துணைத்தலைவர் மயன் தி.த. ரமேஷ் ராஜா வெளியிட்டார். கோட்டாட்சியர் இரா . சந்திர சேகர், அருங்காட்சியகம் காப்பாட்சியர் முனைவர் சிவ. சத்தியவள்ளி ஆகியோர் நூலைப் பெற்றனர். இரா. நாறும் பூநாதன், முனைவர் ஹரிஹரன், முனைவர் சௌந்தர மகாதேவன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.. தொகுப்பாசிரியர் பூர்ணா ஏற்புரை நிகழ்த்தினார். கவிஞர் தாணப்பன் கதிர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


