முனைவர் ஜான்சி பால்ராஜ் எழுதிய குயில் புத்தக வெளியிட்டு விழா நெல்லை புத்தக கண்காட்சியில் நடந்தது. தேசிய புத்தக வாசிப்பு இயக்க தலைவர் தம்பான் தலைமை வகித்தார். எழுத்தாளர் நாறும் பூ நாதர் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நூலை பேராசிரியர் ராமசந்திரன் வெளியிட கண்ண நல்லூர் சந்தோச ராஜதுரை பெற்று கொண்டார். நூலை பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி தமிழ்த்துறை உதவிபேராசிரியை கண்ணகி திறனாய்வு செய்தார். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அருட்செல்வி, மேலநத்தம் பள்ளி தலைமை ஆசிரியர் ஆவுடைத்தங்கம், தொழிலதிபர் பால்ராஜ், உள்பட பலர் கலந்துகொண்டனர். நூலாசிரியர் ஜான்சி பால்ராஜ் ஏற்புரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினரான எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேசும் போது, நெல்லையில் இருந்து வெளிவரும் தி நெல்லை டைம்ஸ் பத்திரிக்கையை பொறுத்தவரை நெல்லை வரலாற்றை வெளிக்கொண்டு வருவதில் முன்னணி வகிக்கிறது. குறிப்பாக நான் எழுதிய “பொருநை நதியில் புதைந்த ரகசியங்கள்”, “ஆச்சி சொன்ன ஆத்தோர கதைகள்” போன்ற தொடர்கள் நெல்லை புகழை பறை சாற்றுவதாக அமைந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் எழுத்தாளர் நாறும்பூ நாதர், மு.வெ.ரா , ஜான்சி பால்ராஜ் உள்பட பல எழுத்தாளர்கள் தொடரையும் , கட்டுரையையும் வெளியிட்டு பெருமை படுத்தி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் முக்கிய எழுத்தாளர்கள் மற்றும் அரசியல் வாதிகளின் பிறந்த நாள், நினைவு நாள்களை வெளியிட்டு வருகிறது. முக்கிய நாள்களில் கவிதை போட்டி நடத்தி இளைஞர்களையும மாணவர்களை ஊக்குவித்து வருகிறது. முனைவர் ஜான்சி பால்ராஜ் எழுதிய குயில் புத்தகம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க கூடிய புத்தகம். பெண் எழுத்தாளர்களுக்கு குடும்பத்தின் உதவி கிடைப்பது அபூர்வம். ஆனால் இங்கு அப்படியல்ல அருடைய சகோதரன், கணவன், மகன் என குடும்ப உறுப்பினர்களே உடன் வந்து இந்த நூலை வெளியிட உதவியுள்ளார்கள். எனவே எழுத்தாளரின் குடும்பத்தினை பாராட்டுகிறேன். இவரின் மாட்டு வண்டி நூல் தமிழ அளவில் பாராட்டு பெற்ற நூலாகும். சிவசுப்பிரமணியன் அய்யாவின் சிஷ்யை மற்றும் இயற்கை ஆர்வலரான ஜான்சி பால்ராஜ் அவர்களுக்கு சென்னை புத்தக கண்காட்சியில் தலை நகருக்கு அழைத்து விருதும் இவரது கட்டுரைக்கு பரிசும் கொடுத்துள்ளார்கள். தற்போது நெல்லை புத்தக கண்காட்சியில் முதல் புத்தகமாக குயிலி புத்தகம் வெளிவந்து சிறப்பு சேர்த்துள்ளது. என்று அவர் பேசினார்.


